டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தொலைகாட்சியில் மிமிக்ரி கலைஞராக புகழ் பெற்று அதை தொடர்ந்து சினிமாவிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனுஷ், சிவகார்த்திகேயன், அஜித், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தொலைகாட்சி காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தவர்.
சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த சமயத்தில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை என்றும், அவர் எழுந்து நிற்கவே சிரமப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அதற்கு அவரது மனைவி அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் ரோபோ சங்கர். அதன்படி, "நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்த போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் எனக்கு உடல் எடை வேகமாக குறைந்துவிட்டது. நல்ல வேளை சரியான சமயத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்து குணப்படுத்தினர் . என்னுடைய மனைவியும், குழந்தைகளும் தான் அந்த கடினமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதனால் தான் விரைவில் நான் குணமாகி வர முடிந்தது" என்றார் ரோபோ சங்கர்.