கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் | முன்பதிவில் நல்ல வரவேற்பில் 'பாகுபலி தி எபிக்' |

சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்த முடித்துள்ள ரகுல் பிரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகியுள்ள ஐ லவ் யூ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். ஜூன் 16ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் ரகுல்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஐ லவ் யூ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு இரண்டு நிமிட காட்சிக்காக 14 மணி நேரம் தான் தண்ணீருக்குள் நின்று நடித்ததாக கூறியுள்ளார். அதோடு இரண்டு நிமிடம் மூச்சை அடக்கியபடி தண்ணீருக்குள் மூழ்கி நடிக்க வேண்டிய இந்த காட்சிக்காக ஒரு மாதம் தான் பயிற்சி எடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் , கடுமையான குளிரில் தான் அந்த காட்சியில் நடித்ததால் ஒவ்வொரு ஷாட்டில் நடித்து முடித்ததும் படக்குழு என் மீது சூடான தண்ணீரை ஊற்றுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரண்டு நிமிட காட்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் என்று கூறியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.