நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் 49வது பிறந்தநாள் என்பதால், அன்றையதினம் இந்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட்கள் வெளியாக இருப்பதாக விஜய் வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ வெளியாக உள்ளது. இந்த வீடியோவுக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
அதோடு, விஜய் நடிக்கும் 68வது படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு சிஎஸ்கே என்று டைட்டில் வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது உண்மையா? இல்லை வேறு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது வரப்போகிற விஜய் பிறந்தநாள் அன்று தெரியவரும்.