Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

04 ஜூன், 2023 - 01:42 IST
எழுத்தின் அளவு:
Vikram-Prabhu-&-Vani-Bhojan's-'Paayum-Oli-Nee-Yenakku'-release-date-locked

நடிகர் விக்ரம் பிரபு, தொடர் தோல்வியில் இருந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் ' திரைப்படத்தில் 'பார்த்திபேந்திரன் பல்லவன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்ற உற்சாகத்தில் உள்ளார். அந்த உற்சாகத்தோடு தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. வாணி போஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கே. எம்.எச் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.பி சினிமாஸ் இரு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகின்ற ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜாக்கிங் சென்ற  தனுஷ்.. வைரலாகும் வீடியோ!ஜாக்கிங் சென்ற தனுஷ்.. வைரலாகும் ... லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)