சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி | ‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் | ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் |
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து, இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்". பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. குழந்தைகள் பின்னணியில் முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ளது.
நடிகை ஸ்ரேயா மியூசிக்கல் டீச்சராக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், பானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய நடிகை ஸ்ரேயா : சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை.
இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டுவந்துள்ளார். இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். இப்படத்தில் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.