இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நாயகியாக அதிதி ஷங்கரும், முக்கிய வேடங்களில் சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர முதலில் திட்டமிட்டனர். அந்தசமயம் உதயநிதியின் மாமன்னன் படம் ரிலீஸாகிறது. இதனால் இந்த படத்தை ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தற்போது மாவீரன் படத்தை ஒரு மாதத்திற்கு முன்பே திரைக்கு கொண்டு வருகின்றனர். இப்படம் வருகின்ற ஜூலை மாதம் 14 தேதி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.