இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
திருவனந்தபுரம்: புட்பால் விளையாட்டை காண சென்ற பிரபல நடிகர் செல்பி எடுக்கும் நேரத்தில் மைதானத்தில் சரிந்துவிழந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பிரபலமலையாள நடிகரான மம்முகோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை துவக்கினார். தொடர்ந்து காமெடி நடிகராக சுமார் 450 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இரண்டுமுறை மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவர் பிளமென்ஸ் ஆப் பாரடைஸ் என்ற பிரெஞ்சுமொழி படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
76 வயதான மம்முகோயா மலப்புரம் மாவட்டத்தில் கால்பந்து போட்டியை துவக்கிவைப்பதற்காக வந்துள்ளார். வந்த இடத்தில் ரசிகர்கள் கூட்டம் செல்பி எடுப்பதாக அவரை சூழ்ந்தனர். அப்போது தனக்கு உடல்நிலை சவுகரியம் இருப்பதாக கூறினார். தொடர்ந்து அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .தற்போது ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மம்முகோயா உடல் நலத்துடன் இருப்பதாக முருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.