ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

மார்வெல் நிறுவனத்தின் கூட்டு சூப்பர் ஹீரோக்கள் படமான கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸியின் முந்தைய 2 பாகங்களும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அதன் 3ம் பாகம் வெளிவருகிறது.
இத்திரைப்படத்தில் கிறிஸ் பிராட், ஸோ சால்டானா, டேவ் பாட்டிஸ்டா, கரேன் கில்லான், போம் க்ளெமென்டிப் ஆகியோர் நடித்துள்ளனர், இதில் வின் டீசல் க்ரூட்டாகவும், பிராட்லி கூப்பர் ராக்கெட்டாகவும், சீன் கன், சுக்வுடி இவுஜி, வில் பவுல்டர் மற்றும் மரியா பகலோவாவாகவும் நடித்துள்ளனர். ஜேம்ஸ் கன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இந்தியாவில் வருகிற மே 5ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படம் போன்று இந்த படத்தின் குழுவினரும் உலகம் முழுக்க புரமோசன் டூர் கிளம்பி உள்ளனர்.