'ஜனநாயகன், பராசக்தி' மோதல்: விஜய் என்ன சொன்னாரு தெரியுமா? சிவகார்த்திகேயன் விளக்கம் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆருக்கே பிடித்த எம் ஜி ஆர் திரைப்படம் “பெற்றால்தான் பிள்ளையா” | கழட்டி விட்ட தம்பியால் புலம்பும் இயக்குனர் அண்ணன் | அருளானந்தபுரம் டூ ஹாலிவுட் ஜெயித்த ஜெர்மி எர்னஸ்ட் | பல்லாண்டு வாழ்க, சந்திரமுகி, லோகா சாப்டர் 1 - ஞாயிறு திரைப்படங்கள் | ‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனியார் விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அப்போது ‛பிளடி ஸ்வீட்' என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், 'விக்ரம்' படத்தில் வந்த 'ஆரம்பிக்கலாங்களா' என்ற வார்த்தை போன்று 'லியோ' படத்தில் ‛பிளடி ஸ்வீட்' என வரும். படம் வரும்போது பார்த்து என்ஜாய் பண்ணுங்க .இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும். முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறினார்.