ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! |

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து சென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும், எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமெண்ட்ரி படமும் தலா ஒரு விருதை பெற்றன. இதில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட அந்த படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ் விழா மேடையில் பேசினார். ஆனால் கூடவே அருகில் நின்றிருந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவிடம் மைக் இருந்தும் அவரை பேச விடாமல் மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் பேச முயற்சித்தும் மைக் வேலை செய்யாததால் அப்செட் ஆனார்.
தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ள குனீத் மோங்கா, “ஆஸ்கர் விழா மேடையில் பேசுவதற்காக முன்கூட்டியே என்னை தயார் படுத்தி வைத்திருந்தேன். விருதை பெற்றதும், இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஒரு இந்திய படத்திற்கு கிடைத்துள்ள விருது இதுதான் என்று பேச வேண்டும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் என் வசமிருந்த மைக் அணைக்கப்பட்டது. இருந்தாலும் நான் மீண்டும் அதே ஆஸ்கர் விழா மேடைக்கு செல்வேன்.. நான் பேச நினைத்ததை மீண்டும் பேசுவேன்..” என்று கிட்டத்தட்ட சூளுரைப்பது போலவே கூறியுள்ளார்.