பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடித்து வரும் படம் லியோ. இதற்கு முன்னதாக கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தில் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்று சொல்லப்படுகிற எல்சியு என்கிற முறையில் கமலின் முந்தைய விக்ரம் பட கதாபாத்திரத்தையும் இதற்கு முன்னதாக தான் இயக்கிய கைதி படத்தின் ஒரு சில கதாபாத்திரங்களையும் தொடர்புபடுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் தனது அடுத்த படத்தை அறிவித்த நாளில் இருந்து இப்போது வரை நெட்டிசன்கள் பலரும் இந்த படமும் லோகேஷ் கனகராஜின் எல்சியு பார்முலாவில் தான் உருவாகிறது என கூறி வந்தனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரில் இருந்து கூட சில காட்சிகளை குறிப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள திரையுலகில் இருந்து இளம் நடிகரான மேத்யூ தாமஸ் என்பவர் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்கிற படத்தில் மாளவிகா மோகனதுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து தற்போது நெட்டிஷன்கள் பலரும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.. அவருடன் கிறிஸ்டி படத்தில் இணைந்து நடித்த மேத்யூ தாமஸ் தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடிப்பதால் கிறிஸ்டி படத்தையும் இந்த எல்சியுவுடன் தொடர்புபடுத்தி தங்களது யூகங்களை பரப்பி வருகிறார்கள். படம் வெளியாவதற்குள் இன்னும் என்னென்ன யுகங்கள் இதுபோல கிளம்புமோ தெரியவில்லை.