'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூரலிகான் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டதிலிருந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதோடு, இந்த லியோ படம் எந்த மாதிரியான கதையில் உருவாகி வருகிறது என்பதையும் ரசிகர்கள் உற்று நோக்கத் தொடங்கி விட்டார்கள்.
சமீபத்தில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகத்தில் பகத் பாசிலை காஷ்மீரில் சந்தித்ததாக ஜோஸ் பேசும் வசனங்களை பகிர்ந்து , அந்த இடத்தில் இருந்து லியோ படம் துவங்கும் என்றும் ரசிகர்கள் கணிக்க தொடங்கி விட்டார்கள். மேலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பெரும் பங்கு வகித்தது. அந்த அளவுக்கு தனது பாடல்கள் மூலம் படங்களுக்கு பெரிய அளவில் வலு சேர்த்தார் அனிருத்.
அதேபோல் லியோ படத்தின் பிரமோ வீடியோவில் இடம்பெற்ற அனிருத்தின் பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததை அடுத்து அந்த பாடலை தனி பாடலாக வெளியிடுமாறு அவரை கேட்டுக் கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் தற்போது அந்த பாடல் உருவான விதத்தை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு இருக்கிறார் அனிருத்.