கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம்தான் வெளியானது. தற்போதுதான் முதல் கட்டப் பதிவு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்திற்கான அறிவிப்பு வெளியான அன்றே இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
கேரளாவில் விஜய் படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அங்குள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் இப்போதே 'லியோ' படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளார்கள். கண்ணூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஐந்து தியேட்டர்களில் அதற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது பற்றிய போஸ்டரையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
பட அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே ஒரு படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகியிருப்பது, அதுவும் கேரளாவில் ஆரம்பமாகியிருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். படம் வெளியாக இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் என்னென்ன செய்வார்களோ ?.