10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி ஜோடியாக நடித்திருந்தார் சப்தமி கவுடா. இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் காந்தாரா படம் தான் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
இந்த நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சப்தமி கவுடா. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கும் 'வாக்சின் வார்' படத்தில் நடிக்கிறார் சப்தமி கவுடா.
இதுகுறித்து அவர் கூறும்போது “புகழ்பெற்ற ஒரு இயக்குனர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. படத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பங்கு இருக்கிறது. என் பங்கை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன்'' என்றார்.