ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
நடிகர் விமல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு பதலளிக்கும் வகையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விமல் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது: எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. அப்படி எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இப்போதுகூட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன். நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டதால் வீட்டிலேயே சிகிச்சை நடப்பதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இது சிரிப்பாகவும், காமெடியாகவும் இருக்கிறது. வேண்டாத விஷக்கிருமிகள் எனக்கு எதிராக இதை செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். இந்த மாதிரியான சின்னபிள்ளைத்தனமாக வேலையை விட்டுவிட்டு உழைக்கிற வேலைய பாருங்கள், வாழவிடுங்கள், நீங்களும் வாழுங்கள். காயப்படுத்த நினைக்காதீர்கள்.
இவ்வாறு விமல் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.