லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இலங்கையை சேர்ந்தவர்கள் தமிழில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் புதிதில்லை. பூஜா, லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது பாலிவுட்டில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவுக்கு தசுனி என்ற இலங்கை நடிகை வருகிறார்.
தமிழில் அண்ணே என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். அக்ஷயா, பேலிஜா, பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், லட்சன், ரஞ்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து படம் உருவாகிறது. அய்யா என்ற பெயரில் சிங்கள மொழியிலும் தயாராகிறது.