தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. இப்படத்தின் நாயகியாக திரிஷா நடிப்பதாக கூறப்படும் நிலையில் வில்லன்களாக சஞ்சய்தத், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூரலிகான், இயக்குனர் உரியடி விஜயகுமார் உள்பட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிடும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், வருகிற பொங்கல் திருநாளில் அந்த வீடியோவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், வருகிற பொங்கலுக்கு விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படம் ரிலீஸ் மற்றும் விஜய் 67வது படத்தின் புரோமோ வீடியோ என்ற இரண்டு பரிசுகள் காத்திருக்கிறது.