அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? |
வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ‛மாயி' சுந்தர்(வயது 50) இன்று(டிச., 24) உடல்நலக் குறைவால் காலமானார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் சுந்தர். மாயி படத்தில் நடித்ததன் மூலம் ‛மாயி' சுந்தர் என அறியப்பட்டார். தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(டிச.,24) அதிகாலை 2:45 மணிக்கு காலமானார். சுந்தர் திருமணம் ஆகாதவர். சொந்த ஊரில் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
ஒரே படத்தை சேர்ந்த மூன்று பேர் மறைவு
இம்மாதம் துவக்கத்தில் தான் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலம் குன்றி மறைந்தார். இப்போது அதே படத்தில் நடித்த மற்றொரு நடிகரான ‛மாயி' சுந்தரும் காலமானார். கடந்தாண்டு கொரோனா பிரச்சனையால் இந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகரான நிதீஷ் வீராவும் மரணம் அடைந்தார். ஒரே படத்தில் நடித்த மூன்று நடிகர்கள் மறைந்தது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.