மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷபீக்கிண்டே சந்தோசம் என்கிற படம் வெளியானது. சீடன், பாஹமதி, யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படத்தையும் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான பாலா நடித்திருந்தார். படம் வெளியான நாளிலிருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தனக்கும் படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் பாலா.
இதுபற்றி பாலா கூறும்போது, “எனக்கு பணம் முக்கியம் இல்லை.. என்றாலும் என்னுடன் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்புக்கு, பேசியபடி சம்பளத்தை சரியாக கொடுப்பதுதான் முறையாக இருக்கும். படத்தில் பணியாற்றியவர்களில் பெண் கலைஞர்கள் அனைவருக்கும் பணம் செட்டில் செய்யப்பட்டுவிட்டது. ஆண்களுக்குத்தான் பாக்கி சம்பளம் செட்டில் செய்யப்படவில்லை.
இந்த படம் கிட்டத்தட்ட 2 கோடி பட்ஜெட் என்கிற அளவிலே தான் எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை 14 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்னேகால் கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த காரை வாங்க முடிகின்ற உன்னி முகுந்தனால், படத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் எப்படி சம்பளம் சரியாக கொடுக்க முடியாமல் போனது.? இந்த படத்தில் பணியாற்றிய பிரபல நடிகர் சித்திக்கின் மகன் சாஹீனுக்கு கூட இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை” என்று தனது மனக்குமுறலை குற்றச்சாட்டாக வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பாலா. அவரது இந்த பேட்டி மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் பாலாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த படத்தின் இயக்குனர் அனூப் பந்தளம் என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு முதல் பட இயக்குனராகவும் கதாசிரியராகவும் எனக்கான சம்பளம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அவர்களுக்கான ஊதியம் சரியாக கொடுக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் பாலா நடித்துள்ள கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிபாரிசு செய்தவரே உன்னி முகுந்தன் தான்.. இந்த படத்தில் பாலா தன்னுடைய கேரக்டரை அவ்வளவு சிறப்பாக செய்துள்ளார்.. அவருக்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது.. இந்த நிலையில் அவர் இப்படி குற்றம்சாட்டியுள்ளதும், அதில் என்னுடைய பெயரை இழுத்துள்ளதும் வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.