புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் | நான் விளம்பரப்படுத்தியது குட்காவை அல்ல ஏலக்காயை.. சல்மான் கான் சமாளிப்பு விளக்கம் | மிருகங்களை பலியிடாதீர்கள் ; ரசிகர்களுக்கு பாலகிருஷ்ணா வேண்டுகோள் | பிளாஷ்பேக்: ஒரே மாதிரியான கதை... வென்றவர் பி ஆர் பந்துலு... வீழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன்... | பொதுவெளியில் எப்படி பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை ; விநாயகன் பளிச் | தென்னிந்திய படங்களை தவிர்ப்பது ஏன் ? மனம் திறந்த சுனில் ஷெட்டி | என்டிஆர், நீல் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்! | சித்தார்த் அப்படிப்பட்டவர் இல்லை! - கார்த்திக் ஜி கிரிஷ் |

ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, படங்களின் மூலம் சாக்லெட் பாய் ஹீரோவாக பிரபலமானவர் ஸ்ரீகாந்த், அதன்பிறகு வர்ணஜாம், போஸ் படங்களின் மூலம் ஆக்ஷன் ஹீரோவும் ஆனார்.
கடந்த 10 ஆண்டுகளாகவே ஸ்ரீகாந்த் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பிரேக் தரும்படியான ஒரு படம் கூட அமையவில்லை. சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இந்த ஆண்டு வெளிவந்த மஹா மற்றும் காபி வித் காதல் படமும் கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள படம் தீங்கிரை. இந்த படத்தில் அவர் வெற்றியுடன் இணைந்து நடிக்கிறார். நாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கியுள்ளார்.
சைக்கோ கிரைம் திரில்லர் ஜார்னரில் உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜனவரி மாதம் வெளிவரும் என்று தெரிகிறது. 2023ம் ஆண்டின் வெற்றி கணக்கை இந்த படம் துவக்கி வைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸ்ரீகாந்த்.