12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
2023ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகின்றன.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிட ஏற்கெனவே திட்டமிட்டுள்ளனர். தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் இப்படத்தை தெலுங்கின் பெரும் வினியோகஸ்தரான தில் ராஜு தயாரிப்பதால் நேரடிப் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் அது சம்பந்தப்பட்ட சங்கங்களால் பேசித் தீர்க்கப்பட்டது.
தெலுங்கில் பொங்கலுக்கு சிரஞ்சீவி நடித்துள்ள 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீர சிம்மா ரெட்டி' ஆகிய நேரடிப் படங்களும், விஜய் நடித்துள்ள 'வாரிசுடு' டப்பிங் படமும் வெளியாக உள்ளன. இப்போது அந்தப் போட்டியில் அஜித் நடித்துள்ள 'துணிவு' படமும் சேரும் எனத் தெரிகிறது. இப்படத்தின் தெலுங்கு வினியோக உரிமையைப் பெற்றுள்ளதாக ராதாகிருஷ்ணா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஐவிஒய் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
பொங்கல் வெளியீடு என தெலுங்கில், இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட படங்களே தியேட்டர்களுக்குப் போட்டி போடும் சூழ்நிலையில் புதிதாக இணைந்துள்ள 'துணிவு' படமும் அந்தப் போட்டியில் எப்படி இணையப் போகிறது என்பது தெரியவில்லை. 'வாரிசுடு' படத்தை விடவும் 'துணிவு' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், படத்தை வெளியிடும் நிறுவனங்கள் பெரிய அளவில் வெளியிட உள்ளதாக திட்டமிட்டு வருகிறார்களாம்.