பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் |
தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஸ்ரேயா. ஆனால், அதற்குப் பின் அவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
ஸ்ரேயா நடித்துள்ள ஹிந்திப் படமான 'த்ரிஷ்யம் 2' படம் கடந்த வாரம் வெளியாகி 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்தப் படத்திற்கான சிறப்புக் காட்சி ஒன்றில் ஸ்ரேயா, அவரது கணவர் ஆன்ட்ரேய் கோஸ்சீவ் முத்தமிட்டுக் கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பொது இடத்தில் இப்படி முத்தமிட்டுக் கொள்வது சரியா என்று விமர்சனங்களும் எழுந்தது. ஆன்ட்ரேய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த முத்த சர்ச்சை குறித்து ஸ்ரேயா கூறுகையில், “இது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சிறப்பான தருணங்களில் ஆன்ட்ரேய் எனக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான ஒன்று. அது சிறப்பானது என நான் கருதுகிறேன். ஒரு இயல்பான விஷயத்திற்காக ஏன் 'டிரோல்' செய்கிறார்கள் என அவருக்கும் புரியவில்லை. நான் மோசமான கமெண்ட்டுகளைப் படிப்பது கூட இல்லை. அப்படி எழுதுவது அவர்கள் வேலை, அதைத் தவிர்ப்பது எனது வேலை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்வேன்,” என்று விளக்கமளித்துள்ளார்.