ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

தற்போது வம்சி பைடி பள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் விஜய். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கொரோனா காலகட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி வெளியிடப்பட்ட இந்த மாஸ்டர் படம் ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் விஜயசேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிக்க, அனிருத் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.