ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காமெடி நடிகர்களான யோகி பாபு சின்னி ஜெயந்த் உள்ளிட்ட 4 நகைச்சுவை நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடரந்து செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, தான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன் என்றும் விரைவில் கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடித்து வருகிறேன். அவர் நல்ல நடிகர். அதற்கு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன். மறைந்த நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர். அப்துல் கலாம் போன்றவருடன் பயணம் செய்தவர். நான் இயக்குனர் சொல்வதை மட்டும் தான் நடித்து வருகிறேன்.
நான் கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மண்டேலா போன்ற படங்கள் கதாநாயகன்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல. அதனால் நான் இது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன்.காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான் அது மக்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு கூறினார்.