லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கன்னட திரையுலகிற்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான ‛காந்தாரா' திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். வழக்கமான ஒரு சராசரி கன்னட படம் என்கிற அளவிலேயே வெளியான இந்தப்படம், மேக்கிங் மற்றும் அதில் சொல்லப்பட்ட கதையம்சம் ஆகியவற்றால் தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில் இந்த படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, “தெலுங்கில் எனது தயாரிப்பில் ரிஷாப் ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அதற்கேற்ற கதையும் காலமும் கனிந்து வரும்போது அதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் ரிஷாப் ஷெட்டி தனது அடுத்த படம் பற்றி கூறும்போது, அது என் கையில் இல்லை. கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.