பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கதாநாயகியாக சில வெற்றிப் படங்களில் நடித்தவர். காதல் கணவர் நாக சைதன்யாவைப் பிரிந்த பிறகும் அவரது இமேஜ் மாறவில்லை. மாறாக, முன்பை விட இப்போதுதான் தனக்கான இமேஜை இன்னும் அதிகமாக உயர்த்தி வருகிறார்.
கடந்த வருடம் வெளிவந்த 'த பேமிலி மேன் சீசன் 2' வெப் தொடர் அவரை இந்திய அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதற்குப் பிறகு நேரடி ஹிந்திப் படங்களிலும் நடிக்க அவர் முயற்சித்து வந்தார். கடந்த சில வாரங்களாக அவருக்கு பழையபடி தோல் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சையில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. அதனால், அவர் நடித்து வரும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பில் கூட கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார்.
தெலுங்கில் அவர் நடித்து முடித்துள்ள 'ஷாகுந்தலம், யசோதா' ஆகிய படங்கள் பான் இந்தியா படங்களாக வெளிவர உள்ளன. 'ஷாகுந்தலம்' படத்தின் வெளியீட்டை அறிவித்துவிட்டு பிறகு 3 டியில் வெளியிட திட்டமிட்டு தள்ளி வைத்தனர். இந்நிலையில் 'யசோதா' படத்தின் வெளியீட்டை நேற்று அறிவித்தனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்குப் பிறகு 'ஷாகுந்தலம்' படமும் அதே போல பான் இந்தியா படமாகவே வெளிவர உள்ளது.
இன்றைய மற்ற முன்னணி கதாநாயகிகளைக் காட்டிலும் சமந்தாவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து பான் இந்தியா படங்களாக வெளிவர உள்ளதால் அவர் பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்தைப் பெறுகிறார்.