திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
''பான் இந்தியா' என்ற வார்த்தை உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த வார்த்தையைக் கேட்பதற்குக் கூட நான் விரும்பவில்லை. சினிமாவில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளை பரிமாறிக் கொள்ளட்டும், அது வரவேற்கத்தக்கது. நாமெல்லாம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படங்கள் எப்போதாவது பான் அமெரிக்கா என்று சொல்லப்பட்டதுண்டா ?, நான் இதுவரை அப்படிக் கேட்டதும் இல்லை,” என்று சில மாதங்களுக்கு முன்பு 'பான் இந்தியா' பற்றி கமெண்ட் செய்திருந்தார் மலையாள நடிகரான துல்கர் சல்மான்.
அவர் சொன்னது போலவே தற்போது ஒவ்வொரு மொழிக்கும் சென்று நடித்து தன்னை 'பான் இந்தியா' நடிகராக உயர்த்தி வருகிறார். மலையாளத்தில் சில பல ஹிட்களைக் கொடுத்த துல்கர் தமிழில் நடித்த 'ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களும், தெலுங்கில் நடித்த 'சீதா ராமம்' படமும் அவருக்கு மற்ற மொழிகளில் வெற்றியைக் கொடுத்தது. கடந்த வாரம் ஹிந்தியில் அவர் நடித்த 'சுப்' படமும் ஓரளவிற்கு வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று ஓடி வருகிறது.
தாய்மொழியான மலையாளத்தைத் தவிர மற்ற மொழிகளிலும் நேரடியாக நடித்து தான் சொன்னதற்கேற்றபடி உயர்ந்து வருகிறார் துல்கர்.