ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் வரவில்லை. அவருக்கு பழையபடி தோல் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துள்ளார் என்று டோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள். ஓய்வெடுத்து வருவதால் சமூக வலைத்தளங்கள் பக்கமும் வரவில்லை என்றார்கள்.
ஆனால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள பான் இந்தியா படமான 'ஷாகுந்தலம்' படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் அந்தப் படம் பற்றிய பதிவுகளை தனது தளங்களில் பதிவு செய்ய மீண்டும் வந்துள்ளார்.
'ஷாகுந்தலம்' படத்தின் அப்டேட்டுகளைப் பற்றி பலரும் பதிவிட்டுள்ளதற்கு நன்றி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார். இருப்பினும் தனது உடல்நலன் குறித்து அவர் எந்தவிதமான பதிவையும் இடவில்லை. அடிக்கடி செல்பி புகைப்படங்களைப் பதிவிடும் சமந்தா மீண்டும் அப்படிப் பதிவிடும் வரை அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.