2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! |

தமிழில் மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடிக்கிறார். தற்போது நிவேதா தாமஸ் உடன் இணைந்து இவர் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் நாளை(செப்.,16) வெளியாக உள்ளது. இதற்காக பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டார் ரெஜினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்களையும், நூடுல்ஸ் குறித்து இரட்டை அர்த்த காமெடி வசனம் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது முதல் உதட்டு முத்தம் அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில், ‛‛ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன்'' என்கிறார் ரெஜினா.