2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
‛‛நேரம், ஜிகிர்தண்டா'' படங்கள் மூலம் புகழ் பெற்றவர் பாபி சிம்ஹா. அதன்பிறகு கோ 2, மசாலா படம், இஞ்சி இடுப்பழகி, இறைவி, மகான், திருட்டு பயலே 2, 777 சார்லி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள பாபி சிம்ஹா தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படமாக ராவண கல்யாணம் என்ற படத்தை தயாரித்து, நடிக்கிறார். இதனை அவரது மனைவியும் நடிகையுமான ரேஷ்மா அருண் குமாருடன் சுபாரனேனியுடன் இணைந்து தயாரிக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜே.வி.மது கிரண் இயக்குகிறார். நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் ஹீரோயின்கள். இவர்களுடன் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியது.