சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், புஷ்பா, கே.ஜி.எப், விக்ரம் மாதிரியான படங்கள் பாலிவுட்டில் வசூலை குவித்து வரும் நிலையில் பாலிவுட் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படங்கள்.
கங்கனா ரணாவத் நடித்த தக்கட் படம் சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானது. இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தியேட்டரில் இந்த படம் 5 கோடிக்கும் குறைவாக வசூலித்தது. ஓடிடி தளத்திற்கு 20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. என்றாலும் தயாரிப்பாளருக்கு 60 கோடி நஷ்டம் ஆனது.
அதன்பிறகு வெளிவந்த படம் சாம்ராட் பிருத்விராஜ். அக்ஷய்குமார் நடித்த இந்த படம் முகலாய மன்னர்களை எதிர்த்து போரிட்டு இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னர் பிருத்விராஜ் பற்றியது. 150 கோடியில் தயாரிக்கப்பட்டு இந்த படமும் 20 கோடிக்கும் குறைவாக வசூலித்து பெரும் நஷ்டத்தை கொடுத்தது.
இந்த வரிசையில் அடுத்து இணைந்துள்ளது ஷம்சேரா. கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்வீர்கபூர் நடிப்பில் வெளியான படம். வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 22ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை 20 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதிகபட்சம் 50 வசூலிக்கும் என்கிறார்கள். பாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்களின் தொடர்தோல்வி பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.