ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நாக சைதன்யா உடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு புஷ்பா படத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, தற்போது ஹிந்தியிலும் 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன் காரணமாக தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும், தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இணையதள நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கலந்து கொண்டார் சமந்தா. அப்போது தனது திருமண வாழ்க்கை முடிவு குறித்த பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதோடு, இந்த நிகழ்ச்சியின் போது அக்ஷய் குமாரும், சமந்தாவும், ‛ஓ சொல்றியா மாமா' ஹிந்தி பாடலுக்கு மேடையில் நடனம் ஆடியுள்ளனர். அது குறித்த புரோமோ வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.