'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) சென்னையில் காலமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், 12 படங்கள் இயக்கி உள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பிற விருதுகளையும் வென்றுள்ளார். பிரதாப் போத்தனின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பாக நேற்று தனது பேஸ்புக்கில் சில பதிவுகளை வெளியிட்டார். காதல், அன்பு, மரணம் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பிரபல எழுத்தாளர்களின் மேற்கோள்களை காட்டி பதிவு செய்துள்ளார். ஒரு பதிவில் ஜார்ஜ் கார்கள் என்பவரின் மேற்கோளை காட்டி, ‛‛மரணம் என்பது நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது'' என்று பதிவுட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛நீங்கள் ஒரு நோயின் காரணத்தை, ஆணிவேரை குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை குணப்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் கடைசி வரை மருத்துவமனையை நம்பித்தான் இருக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். என்னை பொறுத்தவரை அதை காதல் என்பேன்'', ‛‛ வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களை செலுத்தியே கழிந்துவிடும்'' என தெரிவித்துள்ளார்.