இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கும் நெட்பிளிக்ஸ் ஒரிஜனல் ஆங்கிலப்படமான 'தி கிரே மேன்' படம் இந்த மாதம் ஜுலை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கான புரமோஷன் வெளிநாடுகளில் தற்போது நடந்து வருகிறது. அதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அவரது பேச்சை வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மிகவும் வரவேற்றுள்ளார்கள்.
இந்நிலையில் படத்தை இந்தியாவிலும் புரமோஷன் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இது குறித்து படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தாங்கள் இந்தியா வருவதைப் பற்றி அறிவித்துள்ளார்கள். மும்பையில் நடைபெறும் பிரிமீயர் காட்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷுடன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.