ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது. முதல்பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளதாக கூறி அவர்களின் போஸ்டர்களை வெளியிட்டனர். இன்று(ஜூலை 7) திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் போஸ்டர் நாளை வெளியாகும் என தெரிகிறது.
இதனிடையே நாளை(ஜூலை 8) மாலை பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி டீசரை அமிதாப் பச்சனும், மலையாள டீசரை மோகன்லாலும் வெளியிட உள்ளனர். பொன்னியின் செல்வன் படம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது.