லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
2010 ஆம் ஆண்டு வெளியான 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் ஆவார். பியார் பிரேமா காதல், இஸ்பேட்டா ராஜாவும் இதய ராணியும், தனுஷ் ராசி அன்பர்களே, தாராள பிரபு உள்ளிட்ட படங்கள் அவரை பிரபலமாக்கின. தற்போது இயக்குனர் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் ஷண்முகம் இயக்கும் டீசல் படத்திலும் நடித்து வருகிறார் .
இந்நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது . ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணமாம்.