நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உயர்ந்ததற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு காரணம். இந்தக் கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகி சிவகார்த்திகேயேனுக்கு எக்ஸ்ட்ரா மைலேஜை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
“எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான்” ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கும் அனிருத் தான் இசை என்கிறார்கள்.
கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், 'விக்ரம்' படத்தின் வெற்றியால் அனிருத்தே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்ததாம். அதற்கு கமல்ஹாசனும் சம்மதம் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி ஏழாவது முறையாக மீண்டும் இணைகிறது.