புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் |
அண்ணாத்த படத்தையடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தனது 169வது படத்திற்கு ஜெயிலர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யாராய், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற அறிவாளும், விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவர் தனது வாயில் வைத்திருக்கும் அரிவாளும் ஒன்றுதான் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய முந்தைய படங்களின் காட்சிகள் மற்றும் கேரக்டர்களை அடுத்தடுத்து இயக்கும் படங்களிலும் இணைத்துக் கொண்டு வருவதால், அதே பாணியில் நெல்சனும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் சில கேரக்டர்களை ரஜினியின் படத்தில் இணைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் பீஸ்ட் படத்திற்கு பயன்படுத்திய அதே அறிவாளை ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற செய்திருப்பதாக கூறுகிறார்கள்.