தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! |
கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மிக கட்டுப்பாடுகளுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்வு ஒளிபரப்பு உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதால் கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. திருமணம் நடைபெறும் இடத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
திருமண அழைப்பிதழில் பார் கோடு ஸ்கேன் செய்த பின்னரே விஐபி உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ரிசார்ட்சின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மும்பையை சேர்ந்த சுமார் 60 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடற்கரை என்பது பொதுவான இடம். அந்த இடத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த இடத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.