பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிககைளில் ஒருவர் கங்கனா ரணாவத். அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கருத்துக்களைச் சொல்லி மீடியாவின் வெளிச்சத்திலேயே இருப்பவர். கங்கனா கதாநாயகியாக நடித்த 'தக்கட்' என்ற ஹிந்திப் படம் கடந்த மே மாதம் 20ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெறும் 3 கோடியை மட்டுமே வசூலித்து பாலிவுட்டிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தியேட்டர்களில் மக்கள் வராததால் படம் வெளியான சில நாட்களிலேயே பல ஊர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படத்தின் பட்ஜெட்டுடன் சேர்த்து புரமோஷனுக்காக மேலும் ஒரு 10 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். அதனால் மொத்தமாக 80 கோடி ரூபாய் வரை படத்திற்கு செலவாகியுள்ளது. படம் படுதோல்வி அடைந்ததால் ஓடிடி, சாட்டிலைட் உரிமைகளையும் பெரிய விலைக்கு விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவற்றின் உரிமை சுமார் 5 கோடி வரை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர் வசூல், ஓடிடி உரிமை, சாட்டிலைட் ஆகியவை நீங்கலாக இந்தப் படம் எப்படியும் 70 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த படங்களில் இந்த அளவிற்கு நஷ்டத்தைக் கொடுத்த படம் இதுதான் என்கிறார்கள்.