பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம், இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல திரையரங்குகளில் 50 நாட்களுக்கும் குறையாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதுடன் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற மிகப்பெரிய சாதனை இலக்கையும் இந்த படம் கடந்தது. இந்தப்படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
டைசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். லூசிபர், புரோ டாடி ஆகிய படங்களை தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது. லூசிபர் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். கேஜிஎப் 2 படத்தை மலையாளத்தில் பிரித்திவிராஜ் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.