பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். மோகன்லால், சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் இவர், தற்போது பிரித்விராஜ் நடிப்பில் கடுவா மற்றும் மோகன்லால் நடிப்பில் அலோன் என இரண்டு படங்களை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் ஷாஜி கைலாஷ். எழுத்தாளர் இந்துகொபன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..
குறிப்பாக இந்த படத்தின் கதை பெண் போலீசாரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்திற்கும் பின்க் போலீஸ் என்றே டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் நடிப்பதற்கு நயன்தாரா, சமந்தா மற்றும் வித்யாபாலன் இந்த மூவரில் ஒருவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்துவிட வேண்டுமென்று ஷாஜி கைலாஷ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.