போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து தியேட்டர்களில் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று 1000 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் ஓடிடி தளத்தில் நாளை(மே 20) வெளியாக உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ 5 தளத்தில் நாளை வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தைப் பார்க்க ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். இப்போது தனியாக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஜீ 5 சந்தாதாராக மட்டும் இருந்தால் போதும், படத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்துவிட்டார்கள். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது தெரியவில்லை.
அதே சமயம் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. முன்னதாக ஜுன் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேதியை தற்போது மாற்றியுள்ளார்கள். எனவே, தியேட்டர்களில் வெளியானதைப் போன்றே 5 மொழிகளிலும் நாளை ஒரே நாளில் ஓடிடியில் இப்படம் வெளியாகிறது.