லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்தகூட்டம், காத்து வாக்குல வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இதில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி காரணமாக உற்சாகத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் உயர் ரக காரான பெராரி காரை ஓட்டி டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். இதுபற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள அவர், “நீண்ட நாட்களாக பெராரி காரின் லோகோ தான் எனது போன் கேஸில் இருக்கிறது. இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்கிறேன். இது வேறமாரியான மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் டெஸ்ட் டிரைவ் செய்த காரின் விலை சுமார் ரூ.6 கோடி என கூறப்படுகிறது. விரைவில் இந்த காரை அவர் வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.