அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் சினிமாவில் 'ஜோக்கர்' படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். திறமையான நடிகையாக இருந்தும் சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் க்ளாமரில் குதித்த ரம்யா பாண்டியன் ஒரே போட்டோஷூட்டில் உலக பேமஸ் ஆனார் என்று சொன்னால் அது மிகையல்ல. இன்று பல சின்னத்திரை நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னிகளாக வலம் வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டவரே ரம்யா தான்.
பிக்பாஸ் மூலம் கூடுதல் புகழ் அடைந்த ரம்யா, இப்போதும் கூட இன்ஸ்டாகிராமில் வைரல் நாயகியாக தான் வலம் வருகிறார். இன்ஸ்டாவில் அவர் இடத்தை இதுவரை எந்த நடிகையும் பிடிக்கவில்லை. இந்நிலையில் தோட்டோ மியூசிக் வீடியோவிற்காக கவர்ச்சியான கெட்டப் போட்டிருந்த ரம்யா, அதே உடையில் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை வைரலாகின.