நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்டர் லோக்கல், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களை இயக்கிய ராஜேஷ் எம். தற்போது ஹன்சிகா நடிக்கும் வெப் சீரிசை இயக்குகிறார். இந்த வெப் சீரிசுக்கு 'மை 3' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹன்சிகாவுடன் ஆஷ்னா ஜவேரியும், ஜனனியும் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார்.
தொடர் குறித்து ஹன்சிகா கூறியதாவது: ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு ராஜேசுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இது என்னுடைய முதல் இணைய தொடர். நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும் என்கிறார் ஹன்சிகா.
இயக்குனர் ராஜேஷ்.எம் கூறியதாவது: இணைய தொடர் இயக்குவது முற்றிலும் புதிய அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர், இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். என்கிறார் ராஜேஷ்.
இந்த தொடர் டிஷ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.