'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை |

கொரோனா தாக்கம் ஆரம்பித்த பிறகு ஒரு சில நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது என்றால், இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் அந்த சமயத்தில் இருந்து தான் ஓரளவு பிக்கப் ஆகி நிறைய படங்களில் நடித்து வருகிறார்.. குறிப்பாக ஓடிடி தளத்தில் வெளியான பாவ கதைகள் என்கிற ஆந்தாலாஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியிருந்த தங்கம் என்கிற குறும்படத்தில் பெண் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.
இதையடுத்து தற்போது கமலின் விக்ரம், பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, சந்தோஷ் சிவனின் ஜாக் அன்ட் ஜில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் காளிதாஸ். அந்தவகையில் மலையாளம், தமிழ் என இருமொழிகளில் தயாராகி வரும் ‛ரஜினி' என்கிற படத்தில் நடித்துள்ளார் காளிதாஸ். தமிழில் இந்தப்படத்திற்கு ‛ரஜினி ரசிகன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி இந்தப்படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார் காளிதாஸ். வினில் சகாரியா வர்கீஸ் என்பவர் இயக்கியுள்ள இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.