தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு படம் பண்ணுகிறார். அஜித்தின் 61வது படமாக உருவாகும் இதை போனி கபூரே தயாரிக்க, ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் அஜித் 62, 63 படங்களின் தகவல்கள் வெளியாகின. இவற்றில் அஜித் 62 படம் பற்றிய தகவல் வெளியானது உண்மையாகி உள்ளது.
ஆம் முதன்முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதம் துவங்கும் என்றும், அடுத்தாண்டு மத்தியில் ரிலீஸாகும் எனவும் கூறி உள்ளனர்.
முதன்முறையாக அஜித் படத்தை இயக்க உள்ளது பற்றி விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்'' என பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இப்போது தான் அஜித் படத்தை முதன்முறையாக இயக்க போகிறார் என்றாலும் அஜித்தின் என்னை அறிந்தால், வலிமை உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி உள்ளார். குறிப்பாக என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு உதாரு பாடலின் வரிகளை இப்போது மேலே தனது மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.