மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் வரும், 20ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதுகுறித்து நடிகர் சங்க தேர்தல் அலுவலர் பத்மநாபன் அறிவிப்பு: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், 2019 ஜூன் 23ல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை வரும், 20ம் தேதி காலை 8:00 மணிக்கு, கல்லுாரி சாலையில் உள்ள குட் செப்பர்ட் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும். தேர்தல் முடிவு, அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இந்த வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.