ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
'மாஸ்டர்' படத்திற்கு பிறகு விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் பிரம்மாண்டமாய் உருவாகிறது. பீஸ்ட் ரிலீஸ் ஆனதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதையடுத்து விஜய்யை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க போகிறார் என தகவல்கள் பரவி வந்த நிலையில் இப்போது விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் வெற்றி படத்தை லோகேஷ் கொடுத்தவர் என்பதால் விஜய் 67 இவருக்கு தான் என கூறப்படுகிறது.